கொங்கோவில் பேரழிவு: கட்டுக்கடங்காமல் பரவும் எபோலா வைரஸ்! WHO எச்சரிக்கை!

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் பாதிப்பானது சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிக வேகமாகப் பரவி வருவதாகவும், வரலாற்றுப் பதிவுகளிலேயே மிகவும் பேரழிவை ஏற்படுத்திய எபோலா பாதிப்பாக இது மாறக்கூடும் என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) புதன்கிழமை கூறுகையில், தற்போதைய வேகத்தில் பரவினால், இந்த பாதிப்பானது 2014 முதல் 2016 வரை மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பேரழிவை விட அதிகமாகக்கூடும் என்றார்.

அக்காலகட்டத்தில் ஏற்பட்ட எபோலா பாதிப்பினால் 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பதும், அதுவே தடுப்பூசி கண்டுபிடிப்பை விரைவுபடுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிழக்கு காங்கோவில் பதிவான 4,300-க்கும் மேற்பட்ட பாதிப்புகளில், இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா பாதிப்பாக இது மாறியுள்ளது.

இந்த எபோலா பரவல் மே 15 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், மரபணு வரிசைமுறை (Genetic sequencing) சோதனைகள் மூலம் இந்த வைரஸ் உண்மையில் பிப்ரவரி மாதத்திலேயே பரவத் தொடங்கிவிட்டது தெரியவந்தது.

தற்போது பரவி வரும் எபோலா வைரஸ், அரிதான ‘புண்டிகுக்யோ’ (Bundibugyo) வகையைச் சேர்ந்தது என்பதால், இதற்கு இதுவரை எவ்வித தடுப்பூசியோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்பகுதியின் தொலைதூர அமைப்பு மற்றும் சூடான், உகாண்டா, ருவாண்டா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொடரும் வன்முறை மோதல்கள் காரணமாகக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரக் குழுக்கள் சென்றடைவதற்குச் சிரமப்படும் கிராமப்புறங்களிலேயே அதிகமான தொற்றுகளும் உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றன.

பலவீனமான உள்கட்டமைப்பு, போதிய வசதிகள் இல்லாத மருத்துவமனைகள், தவறான வதந்திகளின் பரவல் மற்றும் நிலுவை ஊதியம் வழங்கப்படாததால் சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆகியவை நிலமையை மேலும் மோசமாக்கியுள்ளன.

உலக சுகாதார அமைப்பின் அவசரகால எச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளின் இயக்குநர் டாக்டர் அப்திரஹ்மான் மஹமூத் (Dr Abdirahman Mahamud) கூறுகையில், சராசரி கணிப்புகளின்படி இந்த வைரஸ் பரவல் அடுத்த 6 மாதங்களில் உச்சத்தை அடையும் என்றார்.

நிலைமை மேலும் மோசமடைந்தால், இது 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

2014-2016 காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 28,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டு, 11,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததே இதுவரை வரலாற்றில் பதிவான மிக மோசமான எபோலா பேரழிவாகும்.

அதுவே சர்வதேச அளவில் தடுப்பூசி தயாரிப்பிற்கான முக்கியத் தூண்டுதலாக அமைந்தது.

இருப்பினும், பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் உடனடியாக மேம்படாவிட்டால், தற்போதைய பேரழிவு அந்தச் சாதனையை முறியடித்துவிடும் என்று உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles