எதிர்ப்பலைகளுக்கு மத்தியில் 18 ஆம் திகதி சபைக்கு வருகிறது ’22’

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை இரு வருடங்களுக்கு நீடிக்கும் அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயகார தெரிவித்துள்ளார்.

அதேபோல நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதெல்லையையும் நீடிக்கும் நீதிமன்ற திருத்தச் சட்டமூலமும் அன்றைய நாளில் சபையில் முன்வைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முன்மொழிவுக்கு மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் சில சர்வதேச அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையிலேயே திட்டமிட்டப்படி சட்டமூலம், முதலாம் வாசிப்புக்கென நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles