Air India அதிரடி! விமானிகளுக்கு கட்டாய போதைப்பொருள் சோதனை

Air India விமான நிறுவனம் தனது அனைத்து விமானிகளையும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மற்றும் விமானப் பணியில் பயன்படுத்த அனுமதிக்கப்படாத மருந்துகளுக்கான பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமுலுக்கு வருவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 4ஆம் திகதி Phuket இலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த Air India விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே திடீரென சுமார் 300 அடி உயரத்தை இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

குறித்த விமானத்தின் சிரேஷ்ட விமானி போதைப்பொருள் பரிசோதனையை மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருந்ததாக ஆரம்பகட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஊடக அறிக்கைகளின்படி, அவர் மரிஜுவானா தொடர்பான பரிசோதனையில் நேர்மறையான முடிவைப் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இன்னும் தொடர்கின்றன.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விமானத்தின் இரண்டு விமானிகளும் விசாரணை நிறைவடையும் வரை பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இந்திய அதிகாரிகள், விமான தயாரிப்பு நிறுவனமான Airbus மற்றும் பிரான்ஸின் விமானப் பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போதைய விதிமுறைகளின்படி குறைந்தது 10 வீதமான விமானிகள் சீரற்ற முறையில் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஆனால் பயணிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், இந்த விதிமுறையைத் தாண்டிச் சென்று அனைத்து விமானிகளையும் பரிசோதிக்க Air India தீர்மானித்துள்ளது.

Air India-வின் குறைந்த கட்டண விமான சேவையான Air India Express விமானிகளும் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் தொழில்முறை தரத்தில் உயர்ந்த நிலையைப் பேணுவதுடன், பயணிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என Air India தெரிவித்துள்ளது.

Air India ஏற்கனவே விமானப் பாதுகாப்பு தொடர்பான கடுமையான கண்காணிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான அறிவிப்பு சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles