பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட நால்வருக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் ,பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Latest Articles