Facebook, Instagram-க்கு பெரும் அதிர்ச்சி: $1.4 டிரில்லியன் வழக்கு – Like, Stories, Auto-play உட்பட பல வசதிகளை மாற்ற கோரிக்கை!

அமெரிக்காவில் குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான மிகப் பெரிய வழக்கு விசாரணையை Meta எதிர்கொள்கிறது. இந்த வழக்கின் முடிவு, Instagram மற்றும் Facebook-இல் நாம் பரவலாகப் பயன்படுத்திவரும் பல முக்கிய வசதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

கலிபோர்னியா மற்றும் நியூயோர்க் உள்ளிட்ட அமெரிக்காவின் 30 மாநிலங்கள், குழந்தைகள் தொடர்பான மத்திய மற்றும் மாநில தனியுரிமைச் சட்டங்களை Meta மீறியதாக குற்றம்சாட்டி 2023ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கிலிருந்தே இந்த விவகாரம் உருவாகியுள்ளது.

இந்த மாநிலங்கள் Meta நிறுவனத்திடமிருந்து ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையை கோரக்கூடும். அத்துடன், இளம் பயனர்களுக்காக Meta தளங்கள் இயங்கும் முறையிலும் முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

கோரப்பட்டுள்ள மாற்றங்களில், இளம் பயனர்களுக்கு தெரியும் வகையில் காணப்படும் ‘Like’ எண்ணிக்கைகளை நீக்குதல், முடிவில்லாமல் தொடர்ந்து Scroll செய்யும் வசதியை நிறுத்துதல், பதின்ம வயதினரின் கணக்குகளுக்கு பெற்றோர் உறுதிப்படுத்தலை அறிமுகப்படுத்துதல் மற்றும் பரிந்துரை செய்யும் Algorithms-ஐ மாற்றுதல் ஆகியவை அடங்குகின்றன.

மேலும், முகம் மற்றும் உடல் தோற்றத்தை மாற்றிக் காட்டும் Image Filters-க்கு கட்டுப்பாடு விதித்தல், வீடியோக்கள் தானாக இயங்கும் Auto-play வசதியை நிறுத்துதல், ஒரே நபர் பல கணக்குகளை வைத்திருப்பதில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல் மற்றும் Instagram Stories போன்ற குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் மறையும் பதிவுகளை நீக்குதல் ஆகிய கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இந்த வசதிகள், குழந்தைகளையும் பதின்ம வயதினரையும் சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடத் தூண்டியுள்ளதாக மாநிலங்கள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், பிறருடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பான சமூக ஒப்பீடுகள் உள்ளிட்ட எதிர்மறை விளைவுகளுக்கும் இவை காரணமாகியுள்ளதாக அவை வாதிடுகின்றன.

ஆனால் Meta நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. குற்றச்சாட்டுகளுடன் தாங்கள் கடுமையாக முரண்படுவதாகவும், இளைஞர்களின் பாதுகாப்பையும் நலனையும் ஆதரிப்பதில் நீண்டகாலமாக தங்களுக்கு உள்ள அர்ப்பணிப்பை ஆதாரங்கள் நிரூபிக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு கலிபோர்னியாவில் அமெரிக்க மாவட்ட நீதிபதி Yvonne Gonzalez Rogers முன்னிலையில் விசாரிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னர் New Mexico-வில் இடம்பெற்ற தனியான வழக்கொன்றில் Meta நிறுவனத்திற்கு 942 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இளம் பயனர்களை பாதிக்கும் பல மாற்றங்களை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக Meta தெரிவித்துள்ளது.

தற்போதைய வழக்கில் 30 மாநிலங்களும் வெற்றி பெற்றால், அதன் தாக்கம் மிகவும் பரந்ததாக இருக்கக்கூடும். ஏனெனில் இந்த மாநிலங்கள் அமெரிக்க மக்கள் தொகையின் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

எனவே Meta-க்கு எதிரான தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டால், அமெரிக்காவில் குழந்தைகளும் பதின்ம வயதினரும் Instagram மற்றும் Facebook பயன்படுத்தும் முறையிலேயே அடிப்படை மாற்றங்கள் ஏற்படக்கூடும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles