தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு ,
“பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை பாதுகாக்கும் சட்ட மூலத்துக்கு” அமைச்சரவை அங்கீகாரம் அளித்து விட்டது.
இனி, பயங்கரவாத தடை சட்டத்திற்கு மாற்றீடாக இது,
பாராளுமன்றம் வரும். புதிய பயங்கரவாத தடை சட்டம் அமுலுக்கு ஆகும்.
அதை அப்போது பார்த்து கொள்ளலாம்.
ஆனால் இரு வருடங்களுக்கு இந்த JVP அரசியல்வாதிகள் சொன்னது என்ன?
“..PTA, என்ற பயங்கரவாத தடை சட்டத்தை நாம் முற்றாக ஒழிப்போம். அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டம் வரவே கூடாது…”
இப்படி சொன்னவர்கள், இப்போது புது சட்டம் கொண்டு வருகிறார்கள்.
பார்க்க போனால் சொன்னதை செய்வதை விட, “செய்ய மாட்டோம்” என சொன்னவற்றை தான் இந்த அரசு அதிகம் செய்கிறது.
