பதுளை, கபரகலயில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி 50 வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, மலையக மக்களுக்காக தாங்கள் கட்டிய மாளிகையை பார்வையிடுமாறு மலையகத்திலுள்ள எதிரணி எம்.பிக்களுக்கு, பிரதி அமைச்சர் பிரதீப் திறந்த அழைப்பை விடுத்திருந்தார்.
இந்நிலையில் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
“..இரண்டு வருடங்களில், ஐம்பது வீடுகளை கட்டி முடித்து விட்டோம்..” என, இவர்கள் படுத்தும் பாடு இருக்கே..! 🤭
கல்யாணமானவர்கள் ஒரு குடும்பம். ஒவ்வொரு குடும்பத்துக்கும், குறைந்த பட்சம் 10 பேர்ச் காணி வேண்டும். இதில், இயன்றவர்கள் வீடுகளை, குடிசையோ, மாளிகையோ, சொந்தமாக கட்டி கொள்வார்கள்.
இயலாதவர்களுக்கு, இந்திய நிதி உதவி ஒரு வீட்டுக்கு ரூ. 28 இலட்சம் என தயாராக இருக்கிறது.
தேவை ஒன்றரை இலட்சம் காணிகள்!! அவற்றில், ஒன்றரை இலட்சம் வீடுகள்.!!
கண்காட்சி வேண்டாம். ஆட்சி நடத்துங்கள்.










