கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் காஞ்சன பனாகொட, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் செப்ரெம்பர் 1 ஆம் திகதி அவர் இந்தப் பொறுப்பை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையின் 26வது தளபதியாக பதவி வகித்த அட்மிரல் காஞ்சன பனாகொட, கடந்த ஜூலை 1ஆம் திகதி அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்த சிறிலங்காவின் முன்னாள் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம கடந்த ஜனவரி மாதம் பதவி விலகியதை அடுத்து துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மங்கள, தற்காலிக தலைவராக பணியாற்றி வந்தார்.










