நேபாளத்தில் பிணவறைகள் நிரம்பியதால் QRகுறியீடு மூலம் உடல்கள் அடையாளம்: சபிக்கப்பட்ட 26 ஆம் திகதி

நேபாளத்​தில் மீட்​புப் பணி​கள் தீவிர​மாக நடந்து வரு​கின்​றன. ஆறுகளில் அடித்து வரப்​பட்ட உடல்​கள் கரை ஒதுங்கி வரு​கின்​றன. இதனால் அப்​பகு​தி​யில் உள்ள மருத்துவமனை பிணவறைகள் அனைத்​தும் உடல்​களால் நிரம்பி வழிகின்​றன. இதனால் உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களைப் பாதுகாக்​க​வும், அவர்​களை உறவினர்​கள் அடை​யாளம் காண​வும் நேபாள காவல்​துறை ‘QR’ குறி​யீடு தொழில்​நுட்​பத்​தைப் பயன்​படுத்​தத் தொடங்​கி​யுள்​ளது.

சித்​வான் பகு​தி​யில் மட்​டும் 137 உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன. அங்குள்ள மருத்​து​வ​மனை​களில் 30 முதல் 50 உடல்​களை மட்​டுமே வைக்​கும் வசதி உள்​ள​தால், பயன்​படுத்​தப்​ப​டாத அரசு கட்​டிடம் ஒன்று குளிரூட்​டப்​பட்டு 250 உடல்​களைச் சேமிக்​கும் தற்​காலிகப் பிணவறை​யாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

தனஹுன், கோர்​கா, தாடிங், நவல்​ப​ராசி போன்ற பிற மாவட்​டங்​களில் மீட்​கப்​பட்ட 93 சடலங்கள் பொக்​காரா நகர பிணவறை​களுக்கு மாற்​றப்​பட்​டன. ஆனால், அங்​குள்ள மருத்​து​வ​மனை​களின் மொத்த கொள்​ளள​வான 88 வசதி​யை​யும் தாண்டி உடல்​கள் குவிந்​துள்​ளன.

இதே​போல, தாடிங் மாவட்​டத்​தில் மீட்​கப்​பட்ட உடல் பாகங்​கள் உட்பட 37 உடல்​களில் சில காத்​மாண்​டுக்​கும், கோர்​கா​வில் மீட்​கப்​பட்ட உடல்​கள் பொக்​கா​ரா​வுக்​கும், நவல் பராசி​யின் உடல்​கள் பால்பா பகு​திக்​கும் மாற்​றப்​பட்​டுத் தற்​காலிக இடங்​களில் வைக்​கப்​பட்​டுள்​ளன. மீட்​கப்​பட்ட சடலங்​களின் புகைப்​படங்​கள், கைரேகைகள், உடலமைப்பு விவரங்​கள் மற்​றும் பிற தகவல்​களைச் சேகரித்து ஒரு பட்​டிய​லாகத் தயாரித்​துள்​ளனர்.

இந்த விவரங்​களை அணுகும் வகை​யில் ஒரு ‘க்​யூஆர்’ குறி​யீட்டை உரு​வாக்​கி, தங்​களது அதி​காரப்​பூர்வ பேஸ்​புக் பக்​கத்​தில் காவல்​துறை வெளி​யிட்​டுள்​ளது. பொது​மக்​கள் இந்த ‘க்​யூஆர்’ குறி​யீட்டை ஸ்கேன் செய்​து, தங்​கள் குடும்​பத்​தினரின் விவரங்​களு​டன் ஒப்​பிட்டு உடல்​களை அடை​யாளம் காண முடிவதோடு, தேவை​யின் அடிப்​படை​யில் டிஎன்ஏ பரிசோதனை​களும் செய்​யப்​படு​கின்​றன.

சபிக்கப்பட்ட 26-ம் திகதி

பெரும்பாலான இயற்கை பேரிடர்கள், தீவிரவாத தாக்குதல்கள் 26-ம் திகதி நடைபெற்று உள்ளன. குறிப்பாக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி 26-ம் திகதி குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் திகதி ஈரானில் சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் திகதி இந்திய பெருங்கடல் பகுதி நாடுகளில் சுனாமி அலைகள் தாக்கின.

கடந்த 2005 ஜூலை 26-ம் திகதி மும்பையில் கனமழை பெய்து, பெருவெள்ளம் ஏற்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் திகதி குஜராத்தின் அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் திகதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த 26-ம் திகதி நேபாளத்தில் பெருவெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக 26-ம் திகதி சபிக்கப்பட்ட நாளாக மாறியிருக்கிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles