சடலங்கள் கிடைக்காததால் பொம்மைகளை வைத்து இறுதிச்சடங்கு: நேபாளத்தில் நெஞ்சை உலுக்கும் சோகம்

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் பேரழிவு வெள்ளத்தால் பல கிராமங்கள் தடம் தெரியாமல் அழிந்துபோயிருக்கின்றன.

பயங்கர அதிர்வுடன் பெருக்கெடுத்து வந்த சேறும் சகதியுமான வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 1300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5,000 பேர் காணாமல்போயுள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை அவசரக்கால மீட்புக் குழுவினர் 1,114 உடல்கள் மீட்டிருக்கின்றனர். சீனாவில் 16 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களின் உடல்கள் கிடைக்காததால், உறவினர்கள் கதறி அழுதபடி இறுதிச்சடங்குகளைச் செய்யத் தொடங்கியுள்ளனர்.

உருவப் பொம்மைகளை எரித்து இறுதிச்சடங்குகள் செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன தன் கணவருக்கு இறுதிச்சடங்கு செய்த டோல்மா நெவார் தமாங் என்ற பெண், “அவர் சீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த அசம்பாவிதம் நடந்தது. செய்தி பார்த்துவிட்டுத் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்தும் அவர் எடுக்கவில்லை.

அவரது ஆன்மா சாந்தியடையவும், எங்கு இருந்தாலும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றே ஆசிக்கிறேன். வேறு வழியின்றி இந்தத் தர்பை புல் உருவப் பொம்மை எரிப்புச் சடங்கைச் செய்கிறேன்” என்றார்.

பேரழிவு நடந்து ஒரு வாரம் கடந்த நிலையிலும், நீர்மின் நிலையங்களின் பல சுரங்கப் பாதைகளை மூடியுள்ள அடர்ந்த சேற்றைத் தோண்டியும், துளையிட்டும், வெடிவைத்தும் நேபாள மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடர்ந்து வருகின்றனர்.

இதுவரை சுரங்கப் பாதைகளிலிருந்து உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ள போதிலும், ஏதேனும் அற்புதங்கள் நிகழலாம் என்ற சிறிய நம்பிக்கையுடன் தேடுதல் தொடர்வதாக நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களால் சவக்கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. அடையாளம் தெரியாத நூற்றுக்கணக்கான உடல்களின் டி.என்.ஏ (DNA) மாதிரிகளைச் சேகரித்த பிறகு நேபாள அதிகாரிகள் அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles