உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்:அமெரிக்கா கடும் எதிர்ப்பு

 

ஆப்பிரிக்கக் கண்டத்தின் அளவைப் பெரிதாகவும், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் அளவைச் சிறியதாகவும் காட்டும் புதிய உலக வரைபடத்தை ஏற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை வெள்ளிக்கிழமை வாக்களித்துள்ளது.

ஐ.நா-வின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

கண்டங்களின் நிலப்பரப்பை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 164 நாடுகள் வாக்களித்தன. அமெரிக்கா இதற்கு எதிராக வாக்களித்த நிலையில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விலகியிருந்தன.

‘ஈக்வல் எர்த்’ (Equal Earth) வரைபடக் கோட்டுரு என்று அழைக்கப்படும் இந்தப் புதிய வரைபடம், “உலகின் வரைபடப் பிரதிநிதித்துவத்தின் துல்லியத்தை மேம்படுத்துகிறது” என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1569-ஆம் ஆண்டு பிளெமிஷ் வரைபடவியலாளர் ஜெரார்டஸ் மெர்கேட்டரால் கடல்சார் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய ‘மெர்கேட்டர் வரைபடத்திற்கு’ (Mercator projection) பதிலாக, இந்தப் புதிய வரைபடத்தைப் பயன்படுத்துமாறு உறுப்பு நாடுகளை ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த டோகோ நாட்டின் வெளியுறவு அமைச்சர் ரோபர்ட் டுஸ்ஸி பேசுகையில்,

“வரைபடங்கள் கல்வியை வழிநடத்துகின்றன; கற்பனையை வளர்க்கின்றன; கூட்டுப் பார்வையைத் தீர்மானிக்கின்றன. எனவே அவை ஒருபோதும் நடுநிலையானவை அல்ல. நமது கிரகத்தின் சிதைக்கப்பட்ட உருவத்தை அவை வெளிப்படுத்தும்போது, தலைமுறை தலைமுறையாகத் தவறான புரிதல்களைக் கடத்தும் அபாயம் ஏற்படுகிறது” என்று கூறினார்.

அமெரிக்கா கடும் கண்டனம்

எனினும், இந்தத் தீர்மானத்தைக் கடுமையாகச் சாடியுள்ள அமெரிக்கா, இதுபோன்ற நடவடிக்கைகளே ஐ.நா. அமைப்பு தனது நம்பகத்தன்மையை இழந்து வருவதற்கு முதன்மைச் காரணம் என்று கூறியுள்ளது.

‘உண்மையான அளவுகள் புறக்கணிக்கப்பட்ட மெர்கேட்டர் முறை’

முந்தைய மெர்கேட்டர் வரைபட முறை, நிலப்பரப்புகளின் வடிவங்கள் மற்றும் கோணங்களைத் துல்லியமாகக் காட்டுவதில் கவனம் செலுத்தியது. ஆனால், உருண்டையான முப்பரிமாண பூமி உருண்டையை இருபரிமாணக் காகிதத்தில் வரைவதில் உள்ள சவால்கள் காரணமாக, கண்டங்களின் ஒப்பீட்டு அளவுகள் அதில் தவறாகச் சித்தரிக்கப்பட்டன.

அது வடக்குப் பிராந்தியங்களைப் பெரிதாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதிகளைச் சிறியதாகவும் காட்டியது. இதனால் ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் மிகவும் பெரியதாகவும், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா சிறியதாகவும் தோற்றமளித்தன.

இதனைச் சரிசெய்யும் வகையில் 2018-ஆம் ஆண்டு வரைபடவியலாளர்கள் குழுவால் ‘ஈக்வல் எர்த்’ வரைபடம் உருவாக்கப்பட்டது. இது ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா மற்றும் ஓசியானியா ஆகிய பிராந்தியங்களை அவற்றின் உண்மையான அளவிற்குப் பெரிதாகக் காட்டுகிறது.

“ஈக்வல் எர்த் வரைபடமானது கண்டங்களின் பரப்பளவை அதன் சரியான விகிதத்தில் தக்கவைத்துக்கொள்கிறது; பூமி உருண்டையில் அவை எவ்வாறு தோன்றுகின்றனவோ, அதே வடிவில் இயன்றவரை காட்டுகிறது” என்று அதன் உருவாக்கத்தில் பங்கேற்ற வரைபடவியலாளர் போஜன் சவ்ரிக் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வரவேற்பு

புதிய வரைபடத்திற்கு ஆதரவாக இந்தத் தீர்மானத்தை இணை-முன்மொழிந்த பிரான்ஸ், பழைய மெர்கேட்டர் வரைபடத்தைப் பயன்படுத்துவதைக் கைவிடுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

பழைய வரைபடத்தில் “அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா அல்லது தென்கிழக்கு ஆசியாவை விட அளவுக்கு அதிகமான முக்கியத்துவத்துடன் காட்சியளிக்கின்றன; கிரீன்லாந்து கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் அளவிற்குப் பெரிதாகத் தோன்றுகிறது” என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் சுட்டிக்காட்டினார்.

“வரைபடங்களை மாற்றுவது உலகை மாற்றிவிடாது என்பது உண்மைதான். ஆனால், ஒரு தவறான பிரதிநிதித்துவத்தைச் சரிசெய்வது என்பது உண்மையை நிலைநாட்டும் செயல்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாகத் தனது முன்னாள் காலனித்துவ நாடுகளுடன் நிலவும் கசப்பான உறவுகளைச் சீரமைக்கவும், ஆப்பிரிக்காவுடனான உறவை மேம்படுத்தவும் பிரான்ஸ் முயன்று வரும் வேளையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles