“மலையக மக்களுக்காக எமது அரசாங்கம் ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறவேண்டாம். 7 பேர்ச்சஸ் காணி வழங்கும் வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்தோம். பிறகு ரணில் வந்ததும் 10 பேர்ச்சஸ் வழங்க ஏற்பாடு இடம்பெற்றது.
எனவே, நாம்தான் ஆரம்பித்துவைத்தோம் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
“ தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட்டது உண்மைதான். மறுபுறத்தில் வேலை சுமையும் அதிகரித்துவிட்டது என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். தொழிலாளர்களிடம் சென்று இது பற்றி கேட்டு பாருங்கள்.
6000 வீடுகள் கட்டப்படும் என்றார்கள், 58 வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன. எனவே, வழங்கிய உறுதிமொழியை வழங்கமுடியாமல்போனதால் பொய்யுரைக்க முற்படாதீர். மலையக மக்கள் பொய்யுரைத்து ஏமாற்ற வேண்டாம்.” எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டார்.
