மலையக மக்களின் சமூக, பொருளாதார பிரச்சினைகள் குறித்து சஜித் ஆராய்வு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இன்று (10) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தற்போதைய பொருளாதார நிலைமையுடன் சேர்த்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது இங்கு வருகைதந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விடயங்களைக் கேட்டறிந்தார்.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களினது தற்போதைய வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலை மற்றும் குடும்ப வருமான மட்டம் என்பற்றில் நாட்டின் தற்போதைய பணவீக்க நிலைமை மற்றும் நாளாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன செலுத்தும் தாக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டது. அவ்வாறே, குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை பௌதீக வசதிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இங்கு பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் உள்ள அணுகல், பாடசாலைக் கல்வி மற்றும் பிள்ளைகளின் போசாக்கு மட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் இங்கு ஆழமாக கலந்துரையாடப்பட்டன. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் நீண்டகாலமாக முகங்கொடுத்துவரும் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நடைமுறை ரீதியான தீர்வுகளைக் காணவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் எடுக்கப்பட வேண்டிய நடைமுறை ரீதியிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இங்கு பரிமாறிக் கொள்ளப்பட்டன.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் கவனம் செலுத்தி, பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவற்றுக்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வருகை தந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

மேலும், இப்பிரதேசங்களில் வாழும் மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பிரதேச மட்டத்தில் தகவல்களைத் திரட்டி அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவது தொடர்பிலும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தசந்திப்பில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கதிரவேலு சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம்.தாஹிர், (டாக்டர்) இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம். எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles