பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: மூவர் பாதிப்பு

பொகவந்தலாவை, எல்டொப்ஸ் தோட்டத்தில் மூன்று தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளார், ஏனைய இருவரும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

Related Articles

Latest Articles