வாழைச்சேனையில் உள்ள உணவகம் ஒன்று, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை மீறி போத்தல் குடிநீரை விற்பனை செய்த குற்றச்சாட்டில் ரூ.750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர் போத்தலின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.100 ஆக இருந்தபோதும், அதனை ரூ.130 இற்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், குற்றத்தை ஒப்புக்கொண்ட உணவகத்திற்கு நீதிமன்றம் ரூ.7.5 இலட்சம் அபராதம் விதித்துள்ளது.
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்ட நுகர்வோர் மோசடிகள் குறித்து 1977 என்ற நுகர்வோர் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யலாம்.










