தெஹிவளை, கவுடான , சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கைக்குண்டு தாக்குதலில் இரு சிறார்கள் பலியாகியுள்ளனர்.
10,14 வயதுகளுடைய இரு சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர். அவர்களின் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
தாக்குதலில் காயமடைந்த 10 வயது சிறுவன் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்ததுடன், 14 வயதுடைய அவரது சகோதரன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் 52 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் தந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இக் கைக்குண்டுத் தாக்குதலுக்கான பின்னணி இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
