ஆசிய கிண்ணம் வென்றது இந்திய மகளிர் அணி

ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘T-20’ தொடர் நடந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7 முறை சாம்பியனான இந்தியா, நடப்பு சாம்பியன்இலங்கை அணியை எதிர்கொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி தலைவி ஹர்மன்பிரீத் கவுர், முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி சிறப்பான ஆரம்பத்தை வழங்கியது.

20 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி , 5 விக்கெட்டுகளை இழந்து 185 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 111 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இப்போட்டியில் வென்றதன்மூலம் இந்திய அணி இத்தொடரில் 8வது முறையாக கோப்பை வென்றது.

Related Articles

Latest Articles