எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்பு

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி மீது கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேக நபராக அறிவிக்குமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கபில சந்திரசேன பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், நாமல் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டதைக் காட்டும் தகவல்கள் விசாரணையில் வெளிப்பட்ட பின்னர், இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்து, இந்த வழக்கில் ராஜபக்சவை சந்தேக நபராக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய விமானக் கொள்வனவு உடன்பாடு தொடர்பாக 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால், நாமல் ராஜபக்ச செப்ரெம்பர் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, செப்ரெம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles