ட்ரம்பின் கனவு நனவானது: கிரீன்லாந்தில் அமெரிக்காவுக்கு முழு அதிகாரம் – டென்மார்க்குடன் ஒப்பந்தம் கைச்சாத்து

கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில் இது குறித்து எழுதியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி எதிரி நாடுகள் எதுவும் இந்தத் தீவில் முக்கியமான அல்லது உணர்திறன் வாய்ந்த முதலீடுகளைச் செய்ய முடியாது என்றும், இந்த ஒப்பந்தத்திற்குக் காலாவதி திகதி எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“எனது வழிகாட்டுதலின் கீழ், கிரீன்லாந்து மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பாதுகாக்கவும் தேவையான அனைத்தையும் கிரீன்லாந்தில் செய்வதற்கு, அமெரிக்காவிற்கு என்றென்றும் முழுமையான அதிகாரம் இருப்பதை உறுதி செய்ய டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பணியாற்றினோம்” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்காவிற்குச் சொந்தமாக்க வேண்டும் என்ற டிரம்பின் நீண்டகாலக் கனவை விட இது சற்று மாறுபட்ட ஒன்றாகும்.

1951 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம், கிரீன்லாந்தில் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கும் இராணுவத் தளங்களை அமைப்பதற்குமான முழுமையான உரிமைகளை அமெரிக்கா ஏற்கனவே கொண்டுள்ளது.

கிரீன்லாந்தின் தொலைதூர வடமேற்குப் பகுதியில் ஏற்கனவே அமெரிக்க விண்வெளிப் படையின் (Space Force) தளம் ஒன்று அமைந்துள்ள நிலையில், விரைவில் அந்தத் தீவில் பெரிய அளவிலான இராணுவப் பிரசன்னத்தை அமெரிக்கா மேற்கொள்ளும் என அவர் விரிவான விவரங்கள் இன்றி தெரிவித்துள்ளார்.

டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் இந்த ஒப்பந்தம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. அந்தத் தீவின் மக்கள் சுதந்திரத்தை விரும்புவதுடன், தங்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

தனி அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, இந்த ஒப்பந்தம் தீவு தொடர்பான வாஷிங்டனின் தேசிய பாதுகாப்பு கவலைகளை “நிரந்தரமாகவும் முழுமையாகவும்” தீர்த்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles