நுவரெலியா மாவட்டத்தில் அஸ்வெசும மோசடியில் சிக்கியுள்ள 20 அரச ஊழியர்கள்

கட்டுரையாளர் – புலனாய்வு செய்தியாளர்  பா.நிரோஸ்

இலங்கையில் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்வெசும மோசடிகளில், நோர்வூட் பிரதேச செயலகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்வெசும மோசடியே மிகப்பெரிய மோசடியாக இருக்கலாமென விசாரணையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

வயது மூப்புக் காரணமாக உயிரிழந்த முதியவர்கள் பலரது தகவல்கள் பயன்படுத்தப்பட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டிய அஸ்வெசும கொடுப்பனவை, நுவரெலியா மாவட்ட அரச ஊழியர்கள் பலர் பெற்றுவந்துள்ளதும் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவ, மதவாச்சி, கதிர்காமம், வெல்லவாய ஆகிய பிரதேச செயலகங்களில் இதுவரையில் அஸ்வெசு கொடுப்பனவுகளில் பாரிய மோசடிகள் இடம்பெற்றிருப்பதை நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வு பிரிவு கண்டுபிடித்து கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

ஆனால், நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வெசும மோசடி தொடர்பில் சுமார் 2 மாதங்கள் கணக்காய்வு பிரிவு விசாரணைகளை நடத்தி வருவதோடு, இதுவரையில் இறுதிக் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.

நோர்வூட், தலவாக்கலை பிரதேச செயலகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அஸ்வெசும மோசடிகளில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 20 அரச ஊழியர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையிலான விசாரணைகளில் சுமார் 100 குடும்பங்களுக்குக் கிடைக்க வேண்டிய அஸ்வெசும பணத்தை அரச ஊழியர்கள் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி 3 கோடி ரூபாயை நெருங்கியுள்ளதோடு, தலவாக்கலை பிரதேச செயலகத்தின் அஸ்வெசும மோசடி சுமார் 20 இலட்ச ரூபாய் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வெசும மோசடி தொடர்பான தகவலறியும் உரிமைச் சட்ட விண்ணப்பத்துக்கு பதிலளித்துள்ள நுவரெலியா மாவட்டச் செயலகம், இங்கு இடம்பெற்ற மோசடியோடு தொடர்புடைய 18 அரச ஊழியர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நோர்வூட் பிரதேச செயலகத்தில் நேரடியாகப் பணியாற்றிய 04 அரச ஊழியர்கள், 06 ஆசிரியர்கள் என மொத்தமாக 10 பேர் இதுவரையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, இதில் இரு பெண் அரச ஊழியர்கள் Public Property Actஇன் கீழ் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடியோடு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஹட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த 06 ஆசிரியர்கள் இவ்வாரத்தின் ஆரம்பத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். மேலும் 03 ஆசிரியர்கள், தபால் திணைக்கள ஊழியர் ஒருவர் என நான்கு அரச ஊழியர்கள் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நுவரெலியா மாவட்டச் செயலாளருக்கு நலன்புரி நன்மைகள் சபையின் கணக்காய்வு பிரிவு கடிதம் ஊடாக அறிவித்துள்ளது.

தலவாக்கலை பிரதேச செயலக அஸ்வெசும மோசடியில் சிக்கிய முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்தர், கிராம சேவகர் என இருவர் அங்கு பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

நோர்வூட் பிரதேச செயலக மோசடி குறித்து ஹட்டன் – விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles