போலி முத்திரைகளுடன் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் பெயரில் மோசடி: ஐவர் கைது

நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் போலி அலுவலகக் கடிதத் தாள்கள் மற்றும் முத்திரைகளைப் பயன்படுத்தி, அரசு வேலைகள், வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து பணம் வசூலித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், நுவரெலியா, ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் தொடர்பாடல் நிலையங்களை நடத்தி வரும் சிலரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் பதில் கணக்காளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதுடன், மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் உள்ளிட்ட அதிகாரிகளின் கையொப்பங்களையும் போலியாகப் பயன்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரச வேலைவாய்ப்பு, வீடுகள் மற்றும் கடன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் பெற்றுக்கொண்ட பின்னர், அதற்கான ஆதாரமாக போலி முத்திரைகள் பதிக்கப்பட்ட அலுவலகக் கடிதங்களையும் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணம் செலுத்தியவர்களுக்கு உரிய பதில்கள் கிடைக்காததைத் தொடர்ந்து, அவர்கள் மாவட்டச் செயலாளருக்கு அனுப்பிய கடிதங்கள் பரிசோதிக்கப்பட்டபோது போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து மாவட்டச் செயலாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் போது, மோசடி ஆவணங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பல போலி முத்திரைகள், அலுவலகக் கடிதத் தாள்கள் மற்றும் கணினிகள் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், மாவட்டச் செயலாளர் மற்றும் மேலதிக மாவட்டச் செயலாளரின் பெயர்களைப் பயன்படுத்தி பல்வேறு நிகழ்வுகளுக்காகவும் மக்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நுவரெலியா பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்று வருகின்றன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles