ஹட்டனில் போலி எஞ்சின் எண்களுடன் ஆட்டோ விற்பனை: சந்தேகநபர் கைது

ஹட்டன் நகரிலுள்ள முச்சக்கரவண்டி விற்பனை நிலையமொன்றில், எஞ்சின் எண்களைப் போலியாகப் பதித்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று முச்சக்கரவண்டிகளுடன் அதன் உரிமையாளரையும் ஹட்டன் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 22 ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், (23) ஆம் திகதி ஹட்டன் நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், குறித்த விற்பனை நிலைய உரிமையாளருக்கு 250,000 ரூபாவை முற்பணமாகச் செலுத்தி, எஞ்சிய தொகையைத் தனியார் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் செலுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முச்சக்கரவண்டி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் முச்சக்கர வண்டியை பரிசோதித்தபோது, அதன் எஞ்சின் எண் போலியாகப் பதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்த முச்சக்கரவண்டியை மீண்டும் விற்பனையாளரிடம் கொண்டு சென்று ஒப்படைக்க முயன்றபோது, அவர் அதனைப் பொறுப்பேற்க மறுத்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நபர் ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு போலி முச்சக்கரவண்டிகளைக் கைப்பற்றினர்.

அத்துடன், சந்தேகநபரின் விற்பனை நிலையம் மற்றும் வீட்டினைப் பரிசோதித்தபோது, எஞ்சின் எண்கள் போலியாகப் பதிக்கப்பட்டு பிரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு எஞ்சின்களும், பல முச்சக்கரவண்டிகளின் இலக்கத் தகடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட அல்லது குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டிகளைச் சந்தேகநபர் எடுத்து வந்து, அவற்றைப் பாகங்களாகப் பிரித்து, வேறு முச்சக்கரவண்டிகளின் உதிரிப்பாகங்களைப் பயன்படுத்திப் புதிதாகப் பொருத்தி விற்பனை செய்தாரா என்பது குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர் நீண்டகாலமாக ஹட்டன் நகரில் முச்சக்கரவண்டி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர, கைப்பற்றப்பட்ட முச்சக்கரவண்டிகளின் இலக்கங்கள் மற்றும் விபரங்களை நாட்டின் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி அறிக்கைகளைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எஞ்சின் எண்கள் போலியாகப் பதிக்கப்பட்டிருப்பது தொடர்பில் நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோரின் அறிக்கைகளைப் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles