மலையகத்தில் விடாது பெய்யும் அடை மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (24) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் பனிமூட்டம் காணப்படுவதால், வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இயக்குமாறு சாரதிகளிடம் ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், சில பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவு அபாயங்களும் இடம்பெற்றுள்ளன.

தொடர் மழை காரணமாக தோட்டத் தொழிலாளர்கள், கட்டடக் கலைத் தொழிலாளர்கள் (மேசன்) மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகைப் பதிவு குறைவாகக் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

சீரற்ற காலநிலை நீடிப்பதால் ஆறுகளில் நீராடுவதையோ, நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதையோ மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles