டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகில் கோர விபத்து: ஆட்டோ சாரதி படுகாயம்

அதிவேகமாக பயணித்ததாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்று, இபோச பேருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்துள்ளார். ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா வைத்தியசாலைக்கு அருகாமையிலேயே இன்று (25) பிற்பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த சாரதி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனிலிருந்து நோர்வூட் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும், மஸ்கெலியா சாமிமலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இபோச பேருந்துமீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதி தொலைபேசியில் உரையாடியபடி அதிவேகமாக வாகனத்தை செலுத்தியதால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிர்த்திசையில் வந்த பேருந்துடன் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என நோர்வூட் பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், பேருந்தின் முன்பகுதியும் பகுதியும் சேதமடைந்துள்ளது.
முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்வூட் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles