“சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்” என்று பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள நடிகர் சூரி, தனது நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தை இலங்கை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:
“நான் தற்போது எனது வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன். அதேபோல மக்களும் தத்தமது குடும்பத்தைக் கவனிக்க வேண்டும், தொழிலைப் பார்க்க வேண்டும். என்று அவர் வலியுறுத்தினார்.
