ஒக்டோபர் 2 முதல் கொழும்பு, கம்பளை ரயில் சேவை ஆரம்பம்

டித்வா சூறாவளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையகப் புகையிரதப் பாதையின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, கொழும்பு மற்றும் பேராதனைக்கு இடையிலான வழக்கமான புகையிரத சேவைகள் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

ரம்புக்கனைக்கும் , கம்பளைக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 103 இடங்களில் புகையிரதப் பாதை கடுமையாகச் சேதமடைந்திருந்ததாகப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 36 பாரிய மண்சரிவுகளும், 67 இடங்களில் பாறை சரிவுகள் மற்றும் பாதைகள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருந்தன.

தற்போது அவசியமான அனைத்துப் புனரமைப்புப் பணிகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து பேராதனைக்கும் கம்பளைக்கும் இடையிலான புகையிரத சேவைகள் ஒக்டோபர் 2 ஆம் திகதி பிற்பகல் முதல் வழமையான கால அட்டவணையின்படி மீண்டும் இயங்கும் எனப் புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles