நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ‘ஓட்டோ டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 392 ரூபாவாக விற்கப்படும்.
‘சூப்பர் டீசல்’ விலை ஒரு லீற்றருக்கு 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 528 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘ 92 ஒக்டேன்’ பெட்ரோல் விலை ஒரு லீற்றருக்கு 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 414 ரூபாவாக விற்கப்படும்.
எனினும், ’95 ஒக்டேன்’ பெட்ரோல், விலை ஒரு லீற்றருக்கு 475 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் விலை ஒரு லீற்றருக்கு 285 ரூபாவாகவும்முன்னர் இருந்த விலைக்கே விற்கப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதேபோல எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பஸ் உள்ளிட்ட போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு துறைசார் சங்கங்களால் கோரிக்கை விடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
