டிக்கோயா இரட்டைக் கொலை: தப்பியோடிய சந்தேக நபர் யாழில் கைது

நுவரெலியா மாவட்டத்தின் , டிக்கோயா நகரில் வயோதிப தம்பதியினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கண்டி தேசிய வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை – தெமோதரையைச் சேர்ந்த 37 வயதுடைய ‘மனோஜ்’ அல்லது ‘மனோஹரன்’ எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

முன்னதாக டிக்கோயா நகரில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பகுதியில் வைத்து பொதுமக்களின் உதவியுடன் அட்டன் மற்றும் பொகவந்தலாவை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன்பின்னர் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதையடுத்து, பல்லேகலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தமையினால் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பிலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

அவரை மீண்டும் கைது செய்வதற்காக பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபர் குறித்துக் கிடைத்தத் தகவலுக்கமைய, யாழ்ப்பாண பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி குமார்வேல் தலைமையிலான அதிகாரிகள் இன்றையதினம் நகரின் கடையொன்றுக்கு அருகில் வைத்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், வழக்கு விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.

இந்த சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்த காலப்பகுதியில் பதுளை, ஹாலிஎல, வட்டவளை, டிக்கோயா, லிந்துலை, பொகவந்தலாவை, புலத்சிங்கள, இங்கிரிய மற்றும் பிலியந்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடமாடியுள்ளதாகவும், இவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles