10 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சந்தைக்கு: G7 நாடுகள் அதிரடி முடிவு

ஈரான்மீதான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், தமது அவசரகால இருப்பில் இருந்து 10 கோடி (100 மில்லியன்) பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விடுவிக்கவுள்ளதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் (IEA) ஒருங்கிணைப்பில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த எண்ணெய் இருப்பு சந்தைக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் 20 நாட்களுக்குள் கணிசமான அளவிலான டீசலை முன்னுரிமை அடிப்படையில் சந்தையில் விடுவிக்க G7 நாடுகளும் அதன் பங்காளிகளும் திட்டமிட்டுள்ளன.

தேவை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் டீசல் இருப்புகளை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க வரும் நாட்களில் சர்வதேச எரிசக்தி முகவரகத்தின் அமைப்பில் மீண்டும் ஒன்று கூடவுள்ளதாகவும் அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

“ஐரோப்பிய நாடுகள் தங்களது அதிகப்படியான டீசல் இருப்பில் இருந்து பெருமளவிலான எண்ணெயை விடுவிக்க தற்போது சம்மதித்துள்ளன” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்ட சில நிமிடங்களிலேயே G7 அமைப்பின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரித்தானியா ஆகிய முக்கிய ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட G7 அமைப்பில், ஐரோப்பிய ஒன்றியமும் (EU) ஒரு பார்வையாளர் உறுப்பினராக இடம்பெற்றுள்ளது.

ஈரான் உடனான போரினால் ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, எரிபொருள் விலைகள் விண்ணைமுட்டும் அளவுக்கு உயர்ந்தன.

இதைக் கட்டுப்படுத்த தங்களது டீசல் இருப்பை சந்தைக்கு விடுவிக்குமாறு ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இருப்பினும், ஐரோப்பிய அதிகாரிகள் இதில் ஆரம்பத்தில் தயக்கம் காட்டி வந்தனர். எனினும், தற்போது ட்ரம்பின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய விதிகளின்படி, உறுப்பு நாடுகள் தங்களது 90 நாட்களுக்கான நிகர இறக்குமதி அல்லது 61 நாட்களுக்கான உள்நாட்டுப் நுகர்வுக்குத் தேவையான அவசரகால எண்ணெய் இருப்பைக் கட்டாயமாகப் பேண வேண்டும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles