அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு: லிந்துலைப் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

 

நுவரெலியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் நேற்று (20) பிற்பகல் திறக்கப்பட்டன. இதனால், கொத்மலை நீர்த்தேக்கத்தைச் சென்றடையும் ஆக்ராஓயா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து, லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா, தங்கக்கலை தோட்டப் பகுதியில் ஆற்றுக்கு அருகிலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாக லிந்துல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மதிய வேளையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இதேவேளை, அம்பேவெல பகுதியில் பெய்த கனமழையால் அம்பேவெல ரயில் நிலையம், அதனை அண்மித்த நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதி மற்றும் ரயில் பாதை ஆகியன வெள்ளத்தில் மூழ்கின.

இதன் காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசாநாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles