கொட்டகலை பிரதேச சபையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கான விசேட சபை அமர்வு இன்று (26) கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் தலைமையில், சபையின் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஏகமனதான ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது.










