கொட்டகலை வாசிகளுக்கு இனி கூப்பன் அடிப்படையிலேயே கேஸ் விநியோகம்

கொட்டகலையில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு மட்டுமே சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யவும் அதனை கூப்பன் முறைமையை அறிமுகப்படுத்தி வரிசைப் பிரச்சினைக்கு நிரந்தர மற்றும் தற்காலிகத் தீர்வுகள் மேற்கொள்வதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கக் கூட்டத்தில் (27) இன்று தீர்மானம் செய்துள்ளனர்.

கொட்டகலைப் பகுதியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நோக்கில், கூப்பன் அடிப்படையிலான விநியோக முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, கொட்டகலைப் பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன. குறித்த கூப்பனை கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்திய பின்னரே எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டபோது நடைமுறைப்படுத்தப்பட்ட கூப்பன் விநியோக முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதற்கும் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் கொட்டகலையை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சீரான முறையில் எரிவாயு கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பத்தன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொட்டகலை கிராம சேவை உத்தியோகத்தர், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கொட்டகலைப் பகுதியிலுள்ள அனைத்து எரிவாயு விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர்.

பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எரிவாயு விநியோகத்தில் சமத்துவத்தையும் ஒழுங்குமுறையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் நுகர்வோர் இனி தட்டுப்பாடின்றி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles