பதுளை மாநகர சபையினரால் பதுளை நகரில் உள்ள வடிகால்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை பதுளை மாநகர சபை ஆணையாளரின் நேரடி மேற்பார்வையில் நேற்று தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய பதுளை போதனா வைத்தியசாலையை அண்மித்த வடிகால்கள், லோவர் வீதி , பாடசாலைகளை அண்மித்த வடிகால்கள் என்பன தூர்வாரப்பட்டு அவற்றில் தேங்கி இருந்த மணல், கழிவுப் பொருட்கள் என்பன அகற்றப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள பலத்த மழையின் காரணமாக பிரதான நகரங்கள் தொடருந்து வெள்ள நீரில் மூழ்கிவரும் நிலையில் பதுளை நகரை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதுளை மாநகர சபை நிர்வாத்தினர் தெரிவித்தனர். இதன்போது மாநகர சபையின் ஆளும்கட்சி பிரதிநிதிகளும் பிரசன்னமாகி இருந்தனர்.










