கந்தப்பளை தோட்ட மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு; புதிய திட்டம் மக்கள் பாவனைக்கு

 

கந்தப்பளை கோணப்பிட்டிய தோட்டம், மெரிகோல்ட் பிரிவில் வாழும் மக்களுக்கான புனரமைக்கப்பட்ட சமூக நீர் வழங்கல் திட்டம் இன்று (12) உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்பட்டுள்ளது.

டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டெழ முயற்சிக்கும் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மீளமைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நம்பகமான குடிநீர் வசதியை மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம், குடும்பங்களின் அன்றாட நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், நீண்டகால சமூக மறுமலர்ச்சிக்கும் இத்திட்டம் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ILO) ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஊவா சக்தி மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் (PHDT) மற்றும் பிரவுன்ஸ் பிளான்டேஷன்ஸ் – மதுரட்ட ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் வேலைவாய்ப்பு தீவிர முதலீட்டுத் திட்டத்தின் (Employment Intensive Investment Programme) கீழ் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நாட்டுப் பணிப்பாளர் திருமதி ஜோனி சிம்ப்சன், தெற்காசியாவுக்கான வேலைவாய்ப்பு தீவிர முதலீடுகள் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் தோமஸ் டி. ஸ்டென்ஸ்ட்ரோம், சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட உதவியாளர் பிரசாந்த செனரத் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மேலும், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பிரதிநிதி திருமதி சத்துரிகா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நம்பிக்கை நிதியத்தின் பிரதிநிதி தேவரஞ்சன் மற்றும் ஊவா சக்தி மன்றத்தின் பிரதிநிதி நடேசன் சுரேஷ் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குப் பங்களிப்பு வழங்கிய ஜப்பான் அரசாங்கம், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம், பங்காளி நிறுவனங்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோருக்கு இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டன.

அடிப்படை நீர் வசதியை மீளமைப்பது மட்டுமன்றி, மக்களின் நம்பிக்கையையும் எதிர்காலத்தையும் கட்டியெழுப்பும் முயற்சியாக இத்திட்டம் அமைந்துள்ளதாக நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

G. H. டானியல்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles