ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! மழைக்காலத்தில் உயிரைப் பணயம் வைத்து பயணிக்கும் கலஹா கல்லந்தென்ன மக்கள்

கண்டி மாவட்டத்தின் கலஹ பிரதேசத்திற்குட்பட்ட பின்தங்கிய கிராமமாக கல்லந்தென்ன காணப்படுகின்றது. கலஹவிலிருந்து தெல்தோட்டைக்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து கல்லந்தென்ன கிராமத்திற்குச் செல்லும் வீதி பிரிந்து செல்கின்றது.

பிரதான வீதியிலிருந்து சுமார் 5 கிலோமீற்றர் தொலைவில், மலை உச்சியில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்களைச் சேர்ந்த 200க்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராம மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினையாக வீதிப் போக்குவரத்து காணப்படுகின்றது. இன்றுவரை தமது கிராமத்திற்கான முறையான வீதிக் கட்டமைப்பைக் காண முடியாத நிலையே இங்கு காணப்படுகின்றது.

கிராமத்திற்குச் செல்லும் வீதியின் ஒரு சிறிய பகுதி மாத்திரமே செப்பனிடப்பட்டுள்ள போதிலும், அந்தப் பகுதியும் குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றது. எஞ்சிய வீதிப் பகுதி இதுவரை முறையாகப் புனரமைக்கப்படவில்லை என்பதே இங்குள்ள மக்களின் ஆதங்கமாகும்.

மலை உச்சியை நோக்கிச் செல்லும் வீதி வெட்டப்பட்டுள்ள போதிலும், அது குன்றும் குழியுமாகவும், சேறும் சகதியும் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இதுவரை தமது கிராமத்தின் வீதிப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால், பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் அதிகாலை வேளையிலேயே நடந்துசென்று பிரதான வீதியை அடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு பிரதான வீதியைச் சென்றடையும் மாணவர்கள், தமது பாதணிகளில் படிந்துள்ள சேற்றைச் சுத்தம் செய்த பின்னரே பேருந்துகளில் ஏறிப் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர்.

குறிப்பாக, மழையுடனான காலநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் இந்த வீதியூடாகப் பயணிப்பது பெரும் சவாலாக மாறுகின்றது.

முச்சக்கரவண்டிகள்கூட அனுபவம் வாய்ந்த சாரதிகளால் மாத்திரமே இந்தக் கிராமத்திற்குச் செலுத்தப்படுகின்றன. பெரும்பாலான சாரதிகள் கல்லந்தென்னவுக்குச் செல்ல மறுப்புத் தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இதன் காரணமாக, போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் மக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக இன்று (25) முச்சக்கரவண்டியொன்றும் இடைநடுவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்லந்தென்ன கிராமத்திற்குச் செல்லும் வீதி முழுமையாகப் பயணத்திற்கு அபாயம் நிறைந்ததாகக் காணப்படுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு வீதியைப் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பல வருடங்களாகத் தமது அடிப்படைப் போக்குவரத்துப் பிரச்சினைக்குக்கூடத் தீர்வின்றி வாழ்ந்து வரும் கல்லந்தென்ன மக்களின் அவலநிலைக்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles