சம்பள உயர்வுக்கான போராட்டத்துக்கு திகா அணியும் ஆதரவு

” அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை ஐந்தாம் திகதி மலையகம் தழுவி முன்னெடுக்கின்ற போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது.  கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இதுவரை வெற்றியடையவில்லை. 2018 ஆண்டு கூட்டு ஒப்பந்தத்தின் போது அடிப்படைச் சம்பளம் 500 ரூபா இருந்தபோது அந்த அடிப்படை சம்பளத்தில் 40 வித அதிகரிப்பு ( 200/-) மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்பு தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

ஆனால் இவ்வருடம் ஜனவரி 28ஆம் தேதி கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனினும் ஏழு நூறு ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் கடந்த கூட்டு ஒப்பந்தத்தில் அடிப்படை சம்பளத்தில் மேற்கொள்ளப்பட்ட 40 வீத சம்பள (280) அதிகரிப்பை இம்முறையும் மேற்கொண்டால் 980 ரூபாய் அடிப்படை சம்பளம் கிடைத்திருக்கும்.
ஆகவே இவ்வாறான விடயங்களில் எவரும் கவனம் செலுத்தவில்லை,

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறபப்பட்ட 1000 ரூபாய் சம்பளம் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பிரதம மந்திரியின் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டசம்பளம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை, கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட வாக்குறுதியும் வழங்கப்படவில்லை.

இந்த மூன்று தரப்பும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றி விட்டனர். இந்த மாற்றங்களின் காரணமாகத்தான் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் ஏமாற்றியவர்கள் ஏமாந்தவர்கள் ஒன்று சேர்ந்து . தற்போது தோட்டத்தொழிலாளர்களை களத்தில் இறங்கி ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்துக்காக முயற்சி செய்யுங்கள் என்ற அடிப்படையில் மலையகம் முழுவதும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுகிறது.

இந்த அடிப்படையில் இந்த போராட்டத்திற்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிகள் சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்

Related Articles

Latest Articles