பதுளை மாவட்டத்தின் தோட்டப்புற வைத்தியசாலைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து அறிவிக்குமாறு பிரதமரின் பெருந்தோட்டத்துறை இணைப்புச் செயலாளரும், பதுளை மாவட்டத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அடுத்துவாரம் ஊவா மாகாணத்தின் சுகாதாரத்துறைச் செயலாளர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோரைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும், இதன்போது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து பேசவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தலின் பின்னர் ஏனைய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தமது தோட்டப் புற வைத்தியசாலைகளில் தற்போது நிலவும் பிரச்சினைகளை அறியத்தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0776275429
