பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமைப் போராட்டம் வெற்றியளிக்க முழு ஒத்துழைப்பையும் வழங்கிய அரசாங்கத்துக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை இன்று நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவும், மேலதிக கொடுப்பனவாக 100 ரூபாவும் என நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா வழங்கும் யோசனை சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு அரச தரப்பில் இருந்து ஆதரவாக மூன்று வாக்குகள் கிடைக்கப்பெற்றன. இதற்கும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உப தலைவரும், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளர் எம். ராமேஷ்வரன் ஆகியோரே பிரதமரை சந்தித்து, மக்களின் சார்பில் நன்றிகளை சமர்ப்பித்தனர்.











