அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – ஹக்கீம் அறைகூவல்

நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், எம்.பியுமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” அரசியல் பழிவாங்கலுக்காக முன்னணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் மிக மோசமான நடவடிக்கையில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்படுத்தியே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். நீதித்துறை கட்டமைப்பு சுயாதீனமாக செயற்படும் என நம்புகின்றோம்.  அத்துடன், நீதிக்கு புறம்பான வகையில் செயற்படும் இந்த அரசாங்கத்துக்கு எதிராக போராடுவோம்.” – என்றும் ரவூப் ஹக்கீம் கூறினார்.

Related Articles

Latest Articles