கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தானும்தற்கொலைக்கு முயன்ற தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். எனினும், மூன்று குழந்தைகளும் பலியாகியுள்ளன.
ஒரு குழந்தையின் சடலம் நேற்று மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இரு குழந்தைகளின் சடலங்களும் இன்று மீட்கப்பட்டன.
ஒன்றரை வயதுடைய கிருபாகரன் டேனேஸ், ஐந்து வயதுடைய கிருபாகரன் அக்சயா,
எட்டு வயதுடைய கிருபாகரன் கிருத்திகா ஆகிய சிறார்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
தற்கொலைக்கு முயன்ற பெண் எழுதியதாக குறிப்பிடப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. அதில் குடியும் அடியும் காரணமாக தன்னால் வாழ முடியாதுள்ளது. இன்று எனது பிறந்தநாள் நீங்கள் எல்லோரும் சேர்ந்துதான் இந்த குடிகாரனுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.










