தொழில்நுட்ப நிறுவனமான 99x இலங்கையில் பெண்களுக்கான சிறந்த பணியிடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டதன் ஊடாக பணியிடத்தில் பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்திற்கான சிறந்த உத்திகள் இதனூடாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை கருத்திற்கொண்ட பணியிடத்தை உருவாக்குவது 99x இன் முக்கிய தேர்வாக உள்ளது. இலங்கையில் Great Place To Work நிறுவனத்தின் தலைமையில் இந்த பட்டியலில் 99x நிறுவனம் தரப்பட்டுள்ளதுடன், தமது அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ளது.
‘Great Place To Work நிறுவனம் ஊடாக மீண்டும் நாம் மதிப்படப்பட்டமை எமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். நிறுவனம் என்ற வகையில் மட்டுமல்ல, கைத்தொழில் மற்றும் நாடு என்ற வகையில் நாம் அனைவரும் துறையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதவிர ஆண் பெண் பேதமற்ற உழைப்பாளர் படையணியைமேம்படுத்த ஒன்றாக இணைய வேண்டியது முக்கியம்’ என 99x இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி ஷெஹானி செனவிரத்ன தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றின் பின்னணியில் அவரது இந்த கருத்து உண்மை என புலனாகின்றது. ஆண், பெண் பாலின சமத்துவம் மற்றும் மகளிரை மேம்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகளின் பிரிவு விசேடமாக குறிப்பிடுவதைப்போன்று அநேக பெண்கள் பூகோள ரீதீயாக தமது பெண் என்ற ‘நிழல் தொற்றில்’ பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது
எவ்வித பேதமின்றி அனைவரையும் ஒரே மாதிரி மதிக்கும் நிலைமையை ஏற்படுத்த இன்னும் அநேக விடயங்கள் செய்ய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார். இந்த துறையில் பாரிய அபிவிருத்தி இருந்தாலும் துரதிர்ஷ்டமாக பாலின சமத்துவமின்மை காணப்படுகின்றது. இலங்கையில் பெண்கள் பணியாற்ற சிறந்த பணியிடம் போன்ற குறிகாட்டிகள் அதன் க்கியத்தை அடிக்கடி ஞாபகமூட்டுகின்றதுடன் கைத்தொழிலில் முக்கியமான தரங்களை ஏற்படுத்த அந்த குறிகாட்டிகள் உதவுகின்றன.
ஒரு திறந்த நிறுவன கட்டமைப்பிற்குள் அனைவருக்கும் சம வாய்ப்புக்களை உருவாக்குவதன் மூலம், 99x இன் சமத்துவம் அனைத்து நிறுவன மட்டங்களிலும் செயற்படுகின்றதுடன் அதன் அனுகூலஙங்களை பல வழிகளில் பெறுகின்றது.
படைப்பாற்றல் மற்றும் சுறுசுறுப்பான ஊழியர்கள் சக்தி, ஊழியர்களின் குறைந்த வருவாய் மற்றும் மூன்று கீழ்நிலை காரணிகள் ஆகியவற்றின் நேர்மறையான தாக்கம் இதில் அடங்கும்.
‘பல வருடங்களாக, சிரேஷ்ட தர மதிப்பீடு தலைவராக எனது தொழில் வாழ்க்கை மேம்பட்டுள்ளதுடன், 99x பயிற்சி ஊடாக எனது அறிவு விரிவுப்படுத்தப்பட்டது.
வெளிநாட்டு அனுபவம், MBA பட்டப்படிப்பு முழுமைப்படுத்தல் மற்றும் தொழில்நுட்ப குழுவை வழிநடத்துதல் என்னை பலப்படுத்த எனக்கு சந்தர்ப்பம் வழங்கின’ என 99x தர மதிப்பீடு தலைவி மிஹிரி லேகம்கே தமது அனுபவத்தை விபரித்தார்.
‘பெண்ணாக மற்றும் தாயாக இருந்து தொழில்சார் வாழ்க்கையை முன்னெடுப்பது கடினமாக இருந்தாலும், இலங்கை மற்றும் ஒஸ்லோவில் எனது அன்பான குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆதரவு காரணமாக இது எப்போதும் சமப்படுத்தப்படுகிறது.
99x எனது வாழ்க்கையை வடிவமைத்தது மட்டுமல்லாமல், எனது தனிப்பட்ட ஒருமைப்பாடு, நம்பகத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் நேர்மறை ஆகியவற்றை மேம்படுத்த தேவையான ஆளுமையை எனக்கு தந்து உதவியது. இந்த தொழில்நுட்ப குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.’ அவர் மேலும் கூறினார்.
இலங்கையை தலைமையகமாக கொண்ட 99x டெக்னொலஜி என்பது ஸ்காண்டிநேவிய சந்தைக்கு நன்கு வடிவமைக்கப்பட்ட புதுமையான டிஜிட்டல் தயாரிப்புகளை வடிவமைக்கும் பொறியியல் நிறுவனமாகும். இது 2004 முதல் உலகின் முன்னணி சுயாதீன மென்பொருள் விற்பனையாளர்களுடன் இணைந்து 150 க்கும் மேற்பட்ட உலகளாவிய டிஜிட்டல் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது. 99x டெக்னொலஜி 300க்கும் மேற்பட்ட திறமையான, ஆக்கபூர்வமான சிந்தனை மற்றும் குழு உணர்வுடன் செயற்படும் வல்லுநர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிறுவனம் 2020 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த பணியிடமாகவும், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக இலங்கையின் சிறந்த பணியிடமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.
99x பிரதம செயற்பாடு அதிகாரி ஷெஹானி செனவிரத்ன (நடுவில்) மற்றும் 99x பிரதம மக்கள் அதிகாரி தமித் ஜயசிங்க (வலது) பெண்கள் சிறந்த இடத்திலிருந்து பணிபுரியும் சிறந்த இடத்திற்கான விருதைப் Great Place To Work நிறுவனத்தின் இலங்கையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷானிகா ரத்நாயக்கவிடமிருந்து பெறுகின்றனர்.