மாகாண தேர்தல் – மலையகத்தில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டி!

இவ்வருடம் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில்  முன்னாள், இந்நாள் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளும் போட்டியிடவுள்ளனர்.

மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் முன்னாள் மாகாண அமைச்சர் அமரர் அருள்சாமியின் மகன், பாரத் அருள்சாமி கண்டி மாவட்டத்திலும், அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் உறவினர் ஒருவர் நுவரெலியா மாவட்டத்திலும் களம் காணவுள்ளனர்.

அத்துடன், மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் அமரர். சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரனும் நுவரெலியாவில் போட்டியிடுகின்றார். ரேணுகா ஹேரத்தின் மகளும் போட்டியிடுகின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ராஜரட்னத்தின் மகன், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்றார்.

அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் மகனும், வேலாயுதத்தின் மகன்மாரும் பதுளையில் களமிறங்கவுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்திலும் தமிழ் அரசியல் பிரமுகர்களின் உறவினர்கள் போட்டியிடுகின்றனர்.

Related Articles

Latest Articles