பதுளை, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியாகியுள்ளனர். 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸே காலை 7.15 மணியளவில் பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ஆம் கட்டை மெத்தக்கடை பகுதியில் வைத்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைகிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.சிலர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன், மேலும் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

