கொரோனா தொற்றின் நோய் எதிர்ப்பு சக்தியை இனங்காணும் இலகுவான இரத்தப் பரிசோதனை முறைமையை இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக நிபுணர் குழு இணைந்து கண்டுபிடித்துள்ளது.
விரல் நுனியிலிருந்து எடுக்கப்படும் ஒரு சொட்டு இரத்தத்தை கொண்டே இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முறைமை மிக விரைவான மற்றும் செயன்முறைக்கு இலகுவானதென ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை, தாய்வான், இந்தியா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர்.
3,000 இரத்த மாதிரிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக விசேட நிபுணர்குழுவில் பங்கேற்றிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.