8 வயது மகனை கொடூரமாகத் தாக்கிய தந்தை கைது!

தனது மகனை, மிருகத்தனமான முறையில் தாக்கிய தகப்பனை, வெள்ளவாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

வெள்ளவாயப் பகுதியில் வெஹரயாய என்ற கிராமத்தில் மேற்hடி தாக்குததல் சம்வம் இடம் பெற்றது. 31 வயதுடைய தப்பன் மது போதையில் வீடு வந்து, தனது சொற்படி மகன் நடக்கவில்லையென்று, தனது எட்டு வயது நிரம்பிய சிறுவனை கடுமையாகத்தாக்கியுள்ளார்.

தாக்கப்பட்ட அச் சிறுவன் மறு தினம் பாடசாலைக்கு சென்ற போது, நோய் வாய்ப்பட்ட நிலையிலேயே, வகுப்பில் அமர்ந்திருந்தான். இதனை அவதானித்த பாடசாலை அதிபர், அச் சிறுவனிடம் காரணத்தை வினவினார். சிறுவன் தனது தந்தை தன்னை அடித்தமையைக் கூறி, தான் தாக்கப்பட்ட உடம்பின் பாகங்களையும் காட்டினான். இவ்விடயத்தை அதிபர் வெள்ளவாயப் பொலிசாருக்கு அறிவித்தார். பொலிசார் பாடசாலைக்கு விரைந்து, சிறுவனின் நிலையைக்கண்டு, அச் சிறுவனை வெள்ளவாய அரசினர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இதையடுத்து, சிறுவனின் வாக்கு மூலத்திற்கமைய, சிறுவனின் தகப்பனை பொலிசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் விசாரணையின் பின்னர், வெள்ளவாய மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.சி. பிரசாத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் சிறுவனின் உடம்பெங்கும் பலத்த காயங்கள் தென்படுவதாகவும், அக்காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles