பொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும்.
ஆனால் நகம் வளர்ப்பது அனைவருக்கும் எளிதான ஒரு காரியம் அல்ல. சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துவிடுவதால் அதனை நிர்வகிப்பது சற்று கடினமான செயலாக இருக்கும்.
இதற்கு பணத்தை செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் நகத்தை அழகுப்படுத்த முடியும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.
- எலுமிச்சம்பழத் தோலை பயன்படுத்தி நகங்களை சுத்தம் செய்வது நல்லது. பாலைக் கொதிக்க வைத்து இறக்கிப் பதமான சூட்டில் நகங்களில், படுமாறு செய்து சுத்தமான பஞ்சில் துடைக்க நகம் பளபளக்கும்.
- கை கழுவும்போது நகத்தில் தண்ணீர்படும். உடனடியாக தண்ணீர் சிறிதளவு கூட இல்லாத வகையில் காய்ந்த டவலால் நகங்களைத் துடைத்துவிட வேண்டும்.
- பாதாம் எண்ணெய்யை நகங்களுக்கு பூசி அரைமணி நேரம் வைத்திருந்து கடலைமாவினால் கழுவி சுத்தம் செய்தால் நகங்கள் மினுமினுக்கும்.
- ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால் நகங்கள் உடையாமல் இருக்கும். வாரம் ஒருமுறை நகங்களை வெட்டி சுத்தம் செய்யுங்கள். மேலும் நகங்களில் இருக்கும் அழுக்குகளை நீக்கவேண்டும்.
- கால் நகங்களை யூ வடிவில் வெட்டுவதை தவிர்த்து விட்டு நேராக வெட்டி விட வேண்டும். இப்படி செய்வதினால் கால் நகங்களை எளிமையாக சுத்தம் செய்யலாம், எளிதில் அழுக்கு அடைவதையும் தவிர்க்கலாம்.
- நகங்கள் பளபளப்புடன் மஞ்சள் நிறமாக மாறாமல் இருப்பதற்கு வாரத்தில் இரண்டு நாளாவது நெய்ல் பாலிஷ் போடாமல் இருப்பது நல்லது.