தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 177 பேர் நேற்று கைது!

முகக்கவசம் அணியாமை உட்பட தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 177 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறியவர்களில் 134 பேர் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களாவர்.

அதேவேளை, இக்காலப்பகுதியில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles