பாடசாலைகள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?

சுகாதார தரப்பினர் மற்றும் அதிபர்களுடன் கலந்துரையாடிய பின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் – என்று கல்வி அமைச்சர்  அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது. வார இறுதியில் சுகாதார தரப்பினர், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்களுடன் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போதே மே 3 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். மாணவர்களின் சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கியே தீர்மானங்கள் எடுக்கப்படும்.” – என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles