“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியின் முகநூல் பதிவு வருமாறு,

கனடிய ரொறன்ரோ பல்கலைகழகத்தில், உலக மொழியாம் எங்கள் தமிழை கற்கவும்,ஆய்வு செய்யவும், அமைகின்ற தமிழ் இருக்கை (University of Toronto Chair on Tamil Studies), புலம் பெயர்ந்து வாழும் உலக தமிழ் சமூகத்தின் அடையாளம். நல்ல பரிணாமம் (Evolution).

“நீங்கள் வெட்ட வெட்ட, நாங்கள் வளர்வோம். துளிர் விடுவோம்”, என்ற அரசியல், சமூக, கலாச்சார செய்தியையும் இந்த தமிழ் இருக்கை அறிவிக்கின்றதாக நான் நம்புகிறேன்.

கருப்பொருளாக, இதை முன்வைத்து, வளர்தெடுத்து, நிதி சேகரித்து, சாத்தியமாக்கியுள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும், தமிழ் சங்கங்களுக்கும் எனது பாராட்டுகள்.

அதேபோல், காலமறிந்து நன்கொடை தந்து உதவியுள்ள தமிழகத்தின், அஇஅதிமுக அரசுக்கும், பிரதான எதிர்கட்சி திமுகவுக்கும், இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவனாக எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

Related Articles

Latest Articles