மத்திய மாகாணத்தில் மேலும் 163 பேருக்கு நேற்று கொரோனா தொற்று

மத்திய மாகாணத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்று மாத்திரம் 163 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் நேற்று  35 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை அம்மாவட்டத்தில் ஆயிரத்து 589 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நேற்று 85 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இதுவரை மொத்தமாக 5 ஆயிரத்து 810 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அம்மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்து 404 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

Related Articles

Latest Articles